திருசெந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார். வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன், ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசினார். அப்போது அவர், “பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நாம் நிற்கவேண்டும்” என்றார்.
தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் குறித்து கேட்டபோது, “அதை பற்றி இங்கு பேசவேண்டாம்” என முதலில் கூறிய நடிகர் சிவகார்த்திகேயன், அதன்பின் பேசுகையில் “இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பதுதான் அனைவரின் நினைப்பும். இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நாம் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். இதுபோன்ற குற்றங்களின்போது, தங்களுக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்ல பெண்களுக்கு தைரியம் வர வேண்டும். மாணவிக்கு நடந்ததை போல ஒரு சம்பவம், இனி நடக்காது என வேண்டுவோம். அதைதான் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.