Skip to content
Home » நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

  • by Authour

பாலிவுட் நடிகர்  சைப்  அலிகான்.  இவரது மனைவி  கரீனா கபூர் . இவர்கள் மும்பை  பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்கள்.  நேற்று  முன்தினம் நள்ளிரவு  அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்,  நடிகர் சைப் அலிகானை  மிரட்டி  ரூ.1 கோடி கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில்  அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. இதனால் படுகாயமடைந்த அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்தனர்.  அலிகானின் வீட்டு மாடிப்படிகளில் கொள்ளையன் இறங்கி வரும் காட்சிகள்  கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.  அதைக்கொண்டு கொள்ளையனை போலீசார் இன்று கைது செய்தனர்.  அவரை பாந்த்ரா  காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.