Skip to content
Home » இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

பிரபல பாலிவுட் நடிகரும், கரீன கபூரின் கணவருமான  சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர்  வாக்குவாதம் செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய  மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

சயிப் அலிகான் உடல்நலம் குறித்து லீலாவதி மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி கூறும்போது, “சயிப் அலிகான் அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவருக்கு ஆறு இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. ஒரு காயம் அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

h