நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார். திவ்யா சத்யராஜ், பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாடு குறித்து திவ்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என ஏற்கெனவே தெரியப்படுத்தினேன். உடனே எல்லோரும், எம்.பி ஆக அரசியலுக்கு வருகிறீர்களா? மந்திரி ஆசை உண்டா? சத்யராஜ் சார் உங்களுக்கு பிரசாரம் செய்வாரா?’ எனப் பல கேள்விகள் வந்தன. நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், களப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வர நினைக்கிறேன். களப்பணிகள் செய்தும் வருகிறேன். பிஜேபியில் இணைய விரும்பவில்லை: மகிழ்மதி என்ற இயக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறேன். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. மேலும், பிஜேபியில் இணைய விருப்பம் இல்லை எனக் கூறியுள்ள அவர் தேர்தல் முடிந்ததும் எந்தக் கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.