இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய தலைவர் நரேந்திர நாயக் மற்றும் தமிழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது தேசிய கருத்தரங்கம் பகுத்தறிவாளர் கழகத்துடன் இணைந்து திருச்சி சுந்தர் நகர் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மதச்சார்ப்பற்ற அறிவியல் மனப்பான்மை சமூகத்தை உருவாக்கிடும் பயணத்தை நோக்கி எனும் கருத்தினை மையமாக கொண்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கில் பெரியார்
சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் மீது போடப்படும் புதுகுற்றவியல் சட்டங்களின் தாக்கம், நோக்கமும் முக்கியத்துவமும் மற்றும் பெண்களும், மூடநம்பிக்கைகளும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர் என தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர் ரவிசங்கர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், சுபவீரபாண்டியன், நடிகர் சத்யராஜ், பகுத்தறிவாளர்கள் சங்கத்தில் அகில இந்திய, மற்றும் மாநில, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றுகின்றனர்.