ஐதராபாத் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமந்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றார். அப்போதிருந்து, படங்களில் பிசியாக இருக்கும் நடிகர் நாக சைதன்யாவைப் பற்றி காதல் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. மேலும் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின.
சமந்தாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, நடிகர் நாகசைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாகச் செய்திகள் வெளியாகின. மணிரத்னம் இயக்கிய பொன்னின் செல்வன் படத்தில் வானதி வேடத்தில் நடித்தவர் நடிகை ஷோபிதா.
இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா உடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று அங்கு இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகின. இதுகுறித்து நாக சைதன்யா எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை குணசேகரன் இயக்கியுள்ளார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார். சாகுதலம் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது பிசியாக நடந்து வருகிறது. அதில் விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சமந்தா கூறியதாவது : “எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என காட்டமாக பதிலளித்ததாக செய்தி வெளியானது. ஆனால் தற்போது, சமந்தா ஒரு டுவீட்டில், அதுபோன்ற எந்த கருத்தையும் தான் கூறவில்லை என மறுத்துள்ளார். “இதை நான் சொல்லவே இல்லை!!” என கூறினார்.