Skip to content
Home » ‘கங்குவா’ எனக்கு ரெடி செய்த கதை.. ரஜினி பேச்சு..

‘கங்குவா’ எனக்கு ரெடி செய்த கதை.. ரஜினி பேச்சு..

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு ‘கங்குவா’ கதை குறித்து பேசினார். அதில் அவர் பேசுகையில், ‘அண்ணாத்த படப்பிடிப்பின்போது “நான் ஒரு வரலாற்றுபடத்தில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கதை ரெடி செய்யுங்கள் என கேட்டேன். அவரும் ஒகே என்று கூறியிருந்தார். ”கங்குவா’ எனக்காக உருவாக்கப்பட்ட கதை. அதைதான் இப்போது சூர்யாவிற்கு ஏற்றார்போல் சிவா மாற்றிவிட்டார் என நினைக்கிறேன். நிச்சயமாக சிவா எனக்காக இன்னொரு படம் ரெடி செய்வார். இவ்வாறு ரஜினி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!