திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அதன்பின், சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த மண விழாவில், நடிகர், நடிககைள், இயக்குனர்கள் என சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.ஆதிக் ரவிச்சந்திரனும், ஐஸ்வர்யாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். அதைத்தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் நடந்தது.