தமிழ்நாடு என்று அழைக்க கூடாது. தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறியவர் கவர்னர் ரவி. இதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்ப்பு குரல் எழுப்பியதால் பின்னர் அந்த முடிவில் இருந்து பின் வாங்கினார் கவர்னர் ரவி.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காதவர் கவர்னர் ரவி. தமிழர்கள் அய்யன் திருவள்ளுவராக கொண்டாடும் வள்ளுவருக்கு காவி சாயம் பூசி வருபவர் ரவி.
இப்படி தமிழ் மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் ,பண்பாடு ஆகியவற்றை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி வேலை செய்பவர் கவர்னர் ரவி என தமிழக மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.
ஆனால் அந்த கவர்னர் ரவியை, தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாத்து வருகிறார். அதற்காக என்னுடைய பாராட்டு என நடிகர் பார்த்திபன் கூறினார். இந்த பேச்சை டிவியிலும் ஒளிபரப்பினார்கள்.
இதை பார்த்த மக்கள் பார்த்திபனுக்கு என்னாச்சு, ஐயோ நல்லா இருந்த மனுஷன், இப்படி ஆயிட்டாரே என வேதனைப்பட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், ஆளுநர் மாளிகைக்கு வந்ததிலிருந்தே தமிழ் நன்றாக ஒலித்து கொண்டே இருக்கிறது. தமிழில் பாடல் கேட்பது, கலாச்சாரம் மிகுந்த விளக்கு ஏற்றுதல், தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு இவ்வளவு அழகாக பாதுகாக்கப்படுவதற்காக தமிழக ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் மீது எனக்கு காதல் மலர்ந்து விட்டது. அவர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
தமிழ் புத்தகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிசளித்துள்ளேன். ஒருவர் பேச ஆரம்பித்த 5 நிமிடங்களில் அவர் யார் என ஆளுநருக்கு எடைபோட தெரிகிறது என கூறினார். பார்த்திபனின் இந்த பேச்சு, தமிழக மக்கள் மத்தியில் அவரை பரிதாபமாக பார்க்க செய்துள்ளது.