முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
அதேபோல் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நந்தா இன்று
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருடன் அவரது மனைவி வித்யா ரூபா மற்றும் மகள் உடன் வந்தனர்.
அவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று முருகன், வள்ளி, தெய்வானை, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி, தெட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினர்.
தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்