மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் சென்னை எழும்பூர் அரச குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாயு ஜல் என்ற எந்திரத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த எந்திரம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சு
குடிநீராக மாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பெறப்படும் குடிநீர் சுத்தமானதாகவும், சுத்திகரிக்கப்பட்டு கிருமிகள் நீக்கப்பட்டதாகவும் இருக்கும்.
இந்த எந்திரத்தை வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எழும்பூர் தொகுதி திமுக எம்.பல்.ஏ. பரந்தாமன் மற்றும் டாக்டர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கமல் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த எந்திரத்தை கமல் வழங்கி உள்ளார். அவருக்கு அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.