ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த பிரச்னையில் நடிகை த்ரிஷாவையும் தொடர்பு படுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி சேலம் ஏவி ராஜூ பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் தன்னை குறித்து ஏவி ராஜூ அவதூறான கருத்து வெளி்யிட்டதற்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, இன்று அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஏவி ராஜூ 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில செய்தி தாள்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். டிவி, யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.