கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
கடந்த 22ம் தேதி இந்த மனு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் ஜாமீன் தர அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கியதுடன், 29ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அதன்படி நேற்று தர்ஷன் ஜாமீன் மனு விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் தர்ஷனுக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெறவில்லை என்றால் சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்பு உள்ளது. உடனே அவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழக்கும்படி கூறினார்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷன் தரப்பு கோரிக்கையை ஏற்றி 6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.