Skip to content

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து, 3 பேர் காயம், டிரைவர் கைது….

சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மதுபோதையில் காரை இயக்கியதாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கிவிட்டு வரும்போது கிண்டி கத்திபாராவில் விபத்து நேரிட்டுள்ளது. நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் புஷ்பராஜ் மதுபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதில் 3 பேர்

படுகாயம் அடைந்தனர்.   6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரியவந்த நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது அருந்திவிட்டு காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!