அமிதாப் பச்சன் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “குறைந்த மூளையை கொண்ட முட்டாள்களுக்கு இந்த உலகில் ஒருபோதும் மரணமில்லை. தங்களின் மூளையற்ற மற்றும் அரைகுறையான அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காக, ஒவ்வொரு நாளும் போலிகளை உருவாக்கி பதிவிடுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, அபிஷேக் – ஐஸ்வர்யா தம்பதி சில தினங்களுக்கு முன்னர்தான் (டிச 5) இணைந்து திருமண நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அந்நிகழ்வில் அவர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள், அவர்களின் விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. இந்நிலையில் அமிதாப்பச்சன் பதிவிட்டுள்ள இப்பதிவு, அபிஷேக் – ஐஸ்வர்யா ரசிகர்களால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது