இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அதில் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, 85 வயதிலும் நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக தொடர்ந்து திகழ்கிறார் நடிகர் அமிதாப் பச்சன். சமீபத்தில் அமிதாப் பச்சன், நடிகர் ரஜினியுடன் வேட்டையன் படத்திலும், கமலுடன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனேவுடன் கல்கி 2898 படத்திலும் நடித்தார். தற்போது அவர், கோன் பனேகா குரோர்பதியின் 16வது சீசனை தொகுத்து வழங்குகிறார். பிளாக் பஸ்டர் படங்களில் நடித்து, முக்கிய பிராண்டுகளுக்கு விளம்பர தூதராகவும், தொகுப்பாளராகவும் வருமானம் ஈட்டிவருகிறார் நடிகர் அமிதாப் பச்சன்.
