தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போது நடிகர் அல்லு அர்ஜுன் வருகை புரிந்தார். அப்போது ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 35 வயது பெண் உயிரிழந்தார். அவர் குடும்பத்தினருடன் நடிகர் அல்லு அர்ஜூனை காண சென்ற நிலையில் அவருடைய மகன் இன்னும் சிகிச்சையில் தான் இருக்கிறார்.
இது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொன்னதாக உயிரிழந்த ரசிகையின் குடும்பத்தினருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். இந்த நிலையில் இன்று நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று கைது செய்தனர். சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அல்லு அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார்.