இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், அர்ஜுன் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நீண்ட நாள் காத்திருப்பதற்குப் பிறகு இன்றைய தினம் திரைப்படம் வெளியானது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சியானது திரையிடப்பட்ட நிலையில் கரூரில் 5
திரையரங்குகளில் நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் கொண்டாட்டங்களிலும், உற்சாக நடன நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
கரூர் மாநகரின் கலையரங்கம், திண்ணப்பா திரையரங்குகளில் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க பேப்பர் ஸ்பிரே என அடித்தும் அஜித் அஜித் என முழக்கமிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் திரைப்படத்தை பார்க்க சென்றனர்.