நடிகர் அஜித்குமார் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அஜித், தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக வரும் 15ம் தேதி அவர் வெளிநாடு செல்ல இருக்கிறார். அதற்கு முன்னதாக அவர் உடல் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் மருத்துவமனைக்கு வந்ததாகவும், மருத்துவ பரிசோதனை முடிந்து சற்று நேரத்தில் அவர் வீடு திரும்புவார் என்றும் அஜித்தின் மேலாளர் தெரிவித்தார்.