பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு நடிகர் அமீர் கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு (90) உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…
- by Authour
