திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கடந்த ஆண்டு பதவி வகித்தவர் சத்யபிரியா. ஐபிஎஸ் அதிகாரியான இவர் திருச்சியில் முதல் பெண் போலீஸ் கமிஷனர் என்ற சிறப்பை பெற்றவர். பின்னர் அவர் பொருளாதார குற்றத்தடுப்பு ஐஜியாக மாற்றப்பட்டார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது. இது குறித்து உள்துறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் சத்யபிரியா மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.