தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லம் மறை முக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண் காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலை வகித்தார். இதில் 43.20 குவிண்டால் அச்சு வெல்லம், உருண்டை, நாட்டுச் சர்க்கரை, வட்டு உள்ளிட்டவற்றை வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம், இலுப்பக் கோரை, உள்ளிக் கடை உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 8 விவசாயிகள் கொண்டு வந்தனர். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருவையாறு, செம்மங்குடி, நாகத்தி, கபிஸ்தலம், மணலூர், அரியலூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் பங்கேற்று அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ 4,250, சராசரி ரூ 4,150, குறைந்தப் பட்சம் ரூ 3,650 என விலை நிர்ணயம் செய்தனர்.