Skip to content
Home » பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

பெங்களூரு….4மாத குழந்தையின் அபார நினைவாற்றல்….நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்ஸ் சாதனை

பெங்களூருவை சேர்ந்த பிரஜ்வல்-சினேகா தம்பதியின் மகன் 4 மாதமே ஆன இவான்வி. இந்த குழந்தை பிறந்து 2 மாதம் ஆனபோது தாய் சினேகா விளையாட்டாக 2 படக்காட்சி அட்டை(பிளாஷ் கார்டு) காட்டியுள்ளார். குழந்தை சரியான அடையாளத்தை காட்டியுள்ளது.இவ்வாறு குழந்தை இவான்வி தனது நினைவாற்றல் மூலம் வீட்டு பிராணிகள், பழங்கள், பூக்கள், காய்கறிகள், பறவைகள், வாகனங்கள், பல்வேறு நாடுகளில் 10 கொடிகள் என 125-க்கும் மேற்பட்டவற்றை படக்காட்சி மூலம் அடையாளம் காட்டுவதில் படுசுட்டியாக உள்ளது.

தனது குழந்தையின் அபார நினைவாற்றலை கண்டுவியந்த தாய் சினேகா, 125-க்கும் மேற்பட்டவற்றின் அடையாளத்தை காட்டுவதை வீடியோவாக பதிவு செய்து நோபல் புக் ஆப் ரெக்ககார்ட்சுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை அங்கீகரித்து உலக சாதனை புத்தகத்தில் இவான்வி பெயரை சேர்த்து நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தேர்வுத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம் 4 மாதமே ஆன குழந்தை இவான்வி உலக சாதனை படைத்து பெற்றோருக்கும், பெங்களூருவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இதற்கு முன்பு 120 வகையான பொருட்களை அடையாளம் காட்டி ஆந்திராவை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாத குழந்தை சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இவான்வி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!