கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன் எலவனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அரையாண்டு தேர்வு முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் செல்லும்போது சின்னதாராபுரத்திலிருந்து அரவக்குறிச்சி செல்லும் வழியில் புளியம்பட்டி பிரிவு அருகே டேங்கர் லாரி மோதியதில் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த யுவேந்திரன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
மாணவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே, சின்னதாராபுரம் காவல் நிலைய போலீசார் மாணவனின் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.