திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57) இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் பைக்கில் பெரியமணலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றுகொண்டிருந்த லாரியில் பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கராஜ் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை ராசிபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இறந்து போன ரங்கராஜ்க்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.