புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நா்சாக பணிபுரிந்தவர் ஜெயந்தி(36) . இருதய சிகிச்சை பிரிவில் பணியாற்றினார். இவரதுசொந்த ஊர் தூத்துக்குடிமாவட்டம் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை. இவரது கணவர் பெயர் நாராயணன். தற்போது இவர் கள்
புதுக்கோட்டை ஆட்டாங்குடி சில்வர்நகர் பகுதியில்வசித்து வந்தனர்.
நேற்று இரவு 10 மணி அளவில் நர்சு ஜெயந்தி பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். எஸ்.பி. ஆபீஸ் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரம் ஒரு லாரி நின்றிருந்தது, திடீரென அதன் டிரைவர் தட்சிணாமூர்த்தி லாரியின் கதவை திறந்தார். இதை சற்றும் எதிர்பாராத நிலையில் நர்சு ஜெயந்தி அந்த கதவில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
அப்போது தேவக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி் வந்த அரசு பஸ் கீழே விழுந்து கிடந்த நர்ஸ் மீது மோதியது. இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டவுன் இன்ஸ்பெக்டர் மருது, எஸ்.ஐ பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ் டிரைவர் துறையூர் ஆனந்தகுமார், லாரி டிரைவர் தட்சிணாமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த நர்ஸ்க்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் நாராயணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் புதுகை அரசு ஆஸ்பத்திரி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.