கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஜயகுமார் ( 34) இன்று ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தாா். அப்போது அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் கரடிப்பட்டி பிரிவு அருகே எதிரே கேரளாவில் இருந்து வந்த சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் விஜயகுமாரின் வலது கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார். அவரது உடல் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.