திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சிலோன் காலனியை அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி (55). இவர் இன்று காலை நவல்பட்டு பகுதியில் இருந்து துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளே உள்ள பூலாங்குடி சாலையில் தனது மொபட்டில் மீன் வியாபாரத்திற்காக சென்ற பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி தலை நசுங்கி பறிதாபமாக உயிரிழந்தார். முனியசாமி மீது மோதிய வாகனம் நிக்காமல் சென்று விட்டது இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது நவல்பட்டு போலீசருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது முனியசாமி சாவுக்கு காரணமான வாகனத்தையும் பறிமுதல் செய்வதோடு வாகன ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வேலை செய்யாததால் முனியசாமி மீது மோதிய வாகனம் எதுவென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.