Skip to content
Home » விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

விபத்தில் மூளைசாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்…

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் பாலமுருகன் (28). இவர் கடந்த 14ஆம் தேதி கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் தலையில் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாக ஏற்பட்டது. அவரது உறவினர்கள் பாலமுருகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். அவரது சிறுநீரகங்கள் கல்லீரல் இருதயம் நுரையீரல் உள்ளிட உறுப்புகளை ஐந்து பேருக்கு தானமாக வழங்க தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இவரது உடல் உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை உள் நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *