பாலிமர் தொலைக்காட்சியின் திருநெல்வேலி மாவட்ட செய்தியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி (52). இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது.
அதற்காக அவசரமாக வண்டியை திருப்பியவர் சாலை தடுப்பில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அதில் முகம், தலையில் பலத்த அடிபட்டு நினைவை இழந்தார். அதனையடுத்து அவர் திருநெல்வேலி ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
நிருபர் முத்துக்குமாரசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.