தஞ்சை அருகே குளிக்கரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுரேஷ், ஏட்டு சரவண செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து அடையாளம் தெரியாத அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு அந்த பெண் இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.