Skip to content
Home » படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

படப்பிடிப்பில்…… அமிதாப்பச்சன் காயம்

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சி.டி. ஸ்கேன் செய்து உள்ளனர். இதன்பின்பு, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார். இந்த விவரங்களை அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டு உள்ளார். அவருக்கு மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

இதனால், இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *