Skip to content

அரசு பஸ் மோதி டூவீலரில் சென்றவர் பலி.. திருச்சி அருகே நள்ளிரவில் சம்பவம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன்  கரிகாலன் (45). இவர் நேற்றிரவு நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து தனது மோட்டார் பைக்கில் குறிச்சியில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதேபோல் லால்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பழனி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் பைக் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் கரிகாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரிகாலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!