பெரம்பலூர் துறையூர் சாலை தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நெடுஞ்சாலையாக உள்ளதால் பெரம்பலூரை அடுத்த பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முற் படுபவர்கள் மீதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது அதிவேகத்தில் வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் குறிப்பாக பேருந்து நிறுத்த திலிருந்து 500 மீ தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மது அருந்துவிட்டு செல்லும் நபர் களாலும் சாலை விபத்து ஏற்படுவதாக கூறியும் இன்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் இருசக்கர
வாகனத்தில் சாலையை கடக்க முற்பட்ட போது மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் முத்துசாமி வாகனத்தின் மோதியதில் முத்துசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து இதுபோன்ற விபத்து நடைபெற்று வருவதால் அங்கு பேரி கார்டு அமைக்க கோரியும்,குடிபோதையால் ஏற்படும் விபத்தை தடுக்க அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் பொதுமக்கள் கொண்டு மழையில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.