கேரளாவின் திருச்சூரில் இருந்து 51 பேர் பஸ்சில் வேளாங்கண்ணிக்கு வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் பஸ் வந்த போது எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 40 பேர், மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில், லில்லி ( 63), ரயான் (9), ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தஞ்சை எஸ்பி ஆசிஷ் ராவத் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். மேலும், விபத்து தொடர்பாக ஒரத்த நாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.