நெல்லையில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இன்று , உதவி ஆணையாளர் செந்தில்குமாரையும் பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டார். தற்போது செந்தில்குமார் கோவையில் மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார். அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.