தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிமுக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் பலமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைளை அரசிடம் முன்வைத்தும் போதிலும் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாத சூழலில், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பணிக்கு வராதோர்களை கணக்கு எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 2ஆவது நாளாக பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த கணக்கு எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.