உலக அழகி ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு ‘இருவர்’ என்ற தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம்வந்த ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகனும் முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார்.
இதற்கிடையே, அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விரைவில் பிரிய இருப்பதாகவும் பாலிவுட்டில் சமீப காலமாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அபிஷேக் பச்சன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் கையில் திருமண மோதிரம் இல்லாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணமானதில் இருந்து அபிஷேக் பச்சன் எந்த பொது நிகழ்வுகளிலும் மோதிரம் இல்லாமல் கலந்து கொண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், விவகாரத்து சர்ச்சை குறித்து அபிஷேக் பச்சன் – ஐஸ்வர்யா ஜோடி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அபிசேக் பச்சனின் பூர்வீகம் உ.பி. மாநிலம். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகன். அவருக்கு வயது 47.
ஐஸ்வர்யா ராய், கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 50. இவரது தந்தை மும்பைக்கு குடிபெயர்ந்தார்.