Skip to content
Home » அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

அப்துல்கலாம் ஆசிரியரின் 100வது பிறந்த நாள்… திருச்சியில் கொண்டாட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியில் அப்துல் கலாம் அவர்கள் பயின்ற பொது அவருக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த ஆசிரியர் அருள்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் விழா இன்று இயற்பியல் துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தந்தை டாக்டர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத்தலைவர் ரவி வரவேற்புரை வழங்கினார். இதில் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதுகலை இயற்பியல் மாணவர்களுக்கான செய்முறை விளக்க கையேடு வெளியிட்டார் தொடர்ந்து மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார்

அவர் தனது உரையில் “டாக்டர் கலாம் தான் பயின்ற செயின்ட் ஜோசப் கல்லூரியையும், தனக்கு இயற்பியல் கற்றுக் கொடுத்த அருள்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை அவர்களையும் அடிக்கடி நினைவு கூறுவார் தனது ஆசிரியர்கள் மீது காலம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். கலாம்- சின்னதுரை இடையேயான உறவு ஆசிரியர்-மாணவர்

உறவிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மாணவர்கள் அடிப்படை அறிவியலை நன்கு புரிந்துகொண்டு படித்தால், முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் செயலர் தந்தை அமல், முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் அருமைராஜ் , பேராசிரியர் மாகி டயனா பேராசிரியர் டாம்னிக் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!