அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி – சங்கீதா தம்பதியினரின் இளைய மகள் ஸ்வேதா (18). இவர் கோயமுத்தூரில் உள்ள கல்லூரியில் டி. பார்ம் படித்து வருகின்றார். ஸ்வேதாவிற்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற, கல்லூரியில் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து ஸ்வேதா கடந்த சில தினங்களாக தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகாத நிலையில், கடும் வயிற்று வலி ஏற்பட்டு துடிதுடித்த ஸ்வேதா, வீட்டில் யாரும் இல்லாத போது மேல குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வயிற்று வலி…கல்லூரி மாணவி தற்கொலை… ஜெயங்கொண்டம் போலீஸ் விசாரணை…
- by Authour
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2025/02/college-student-death-709x620.jpg)