ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சைக்கிள் ஸ்டாண்டில் பைக் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தது. அதனை யாரும் வந்து எடுத்துச் செல்லவில்லை என்று போலீசாரிடம் சைக்கிள் ஸ்டாண்ட் ஊழியர்கள் கூறினர். இது சம்பந்தமாக போலீசார் பைக்கை பறிமுதல் செய்து அதில் உள்ள என்னை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த பைக் ஆம்பூர் எஸ் கே ரோடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பைக்கை மாதனூர் நாச்சார் குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் ( 26) என்பவர் திருடி சென்றதும், பின்னர் பைக்கை ஆம்பூர் சைக்கிள் ஸ்டாண்டில் விட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
