Skip to content
Home » கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • by Senthil

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில்   கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. தாங்கள்  தொழில் புரியும் இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான வாகனம் மற்றும் ஆயுதங்களுக்கு ஆயுத பூஜையை கொண்டாடி வரும் மக்கள், கரூர் மாவட்டத்தில்  ஆட்டம் பாட்டத்துடன் ஆயுத பூஜை  கொண்டாடினர்.

இன்று காலை முதலே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு மற்றும் வீட்டுக்கும் தேவையான வாழைப்பழம், தேங்காய், வாழை இலை, மா இலை, தோரணங்கள், பொரி, சுண்டல் பூக்கள் உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் வாங்கினர். ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக  கரூர் பேருந்து நிலையத்தில் வெளிப்புறம் அமைந்துள்ள ஆட்டோ

உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக ஆட்டோவிற்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆட்டோ ஸ்டாண்ட் ஆயுத பூஜையை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு  மாலை அனுவித்து தொடர்ச்சியாக ஆட்டோ ஸ்டாண்ட் முன்புறம் வாழை இலையில், பொரி, சுண்டல், தேங்காய், பழம் உள்ளிட்ட பிரசாதங்களை வைத்து கற்பக விநாயகர் ஆலய சிவாச்சாரியார் அர்ச்சனை செய்தார்.

அதைத் தொடர்ந்து அனைத்து ஆட்டோக்களுக்கும்  தீபங்கள் காட்டப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அங்கிருந்து அனைத்து ஆட்டோக்களுக்கும் நீர் பூசணிக்காய் மூலம் ஆரத்தி எடுக்கப்பட்டு அதனை சாலையில் உடைத்து திருஷ்டி கழித்தனர்.

அப்பகுதி பொதுமக்களுக்கு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக இலவசமான பொருட்களை வழங்கி தங்களது ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!