தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டது. இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. இந்நிலையில், பால், நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. 500 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை ரூ.250ல் இருந்து ரூ.260, 100 கிராம் குக்கிங் வெண்ணெய் விலை ரூ.52ல் இருந்து ரூ.55ஆகவும் உயர்ந்துள்ளது.