சென்னை கிண்டியில் நடைபெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆவினில் கடந்த ஏப்ரல் மாதம் நாள் ஒன்றுக்கு 27 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது, தற்போது பால் கொள்முதல் 37 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, பால் விலை நிர்ணயம் செய்து ரசீது வழங்கப்படுகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.