திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….
- by Authour
