டில்லி சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் அங்கு ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என ஆம் ஆத்மி இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜகவினர் ஆம் ஆத்மி ஓட்டுக்களை எல்லாம் நீக்கி வருவதாக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் டில்லியில் ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும். காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்றும் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.