அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை அரியலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர்
பவுன்ராஜ், ரவி, இளையபெருமாள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார். திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் தின கூலியாக பணிபுரிந்து வரும் மணிவண்ணன் ரிஜிஸ்டர் செய்ய வந்தவர்களிடமிருந்து பெற்ற ௹ 23ஆயிரம் லஞ்சப்
பனத்தை சப் ரிஜிஸ்டர் சண்முகத்திடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரனை செய்து வருகின்றனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் கூறுகையில் அரசு அலுவலகங்களில் மற்றும் அரசு அதிகாரிகள் தாங்கள் பணி செய்ய கையூட்டு லஞ்சம் கேட்டால் 94981 05882 என்ற எண்ணில் செல்போன் வாயிலாகவும் வாட்ஸ் அப் மூலமும் தகவல் தெரிவித்தால். முறைப்படி மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.