ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்று படிதுறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர். புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில் மஞ்சள் கயிறு கட்டியும் காவிரி தாயை வணங்கினர். இந்த வருடம் திருச்சி காவிரி ஆற்றில் சுமார் 10,000 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் ஆடி 18 கொண்டாடி வருகின்றனர். அதன் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது… தஞ்சை, திருச்சி, குளித்தலை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.