பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோயில் கொடிமரத்திற்கு முன்பு தீபம் ஏற்றி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் மூலம் மாம்பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.