அமாவாசை தினத்தன்று தங்களது மூதாதையர்களுக்கு திதி வழங்கி வழிபடுவது வழக்கம். அதில் ஆடி , தை அமாவாசைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஜூலை 17-ந்தேதி (ஆடி-1) அமாவாசையும், ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) ஒரு அமாவாசையும் என 2 அமாவாசை வருகிறது.
இதனால் எந்த அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி வழங்கலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இதுகுறித்து ஜோதிடர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதில் ஆகஸ்டு 16-ந்தேதி (ஆடி-31) வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரியதாகும். அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது. ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதால் நல்ல பலன்களும், மோசமான பலன்களும் நடக்கலாம்.
வடமாநிலங்களில் மழை அதிக அளவில் இருக்கும். தொழில் அதிபர்கள் கஷ்டப்பட நேரலாம். பெரிய நிறுவனங்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படலாம். வடமாநிலங்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.